இங்கிலாந்திற்கு எதிராக சதம் அடித்த ரோஹித் சர்மா

81பார்த்தது
இங்கிலாந்து அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா சதம் அடித்து அசத்தியுள்ளார். 172 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 12 பவுண்டரி விளாசி 111 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார். இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான 3வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணி தற்போது வரை 3 விக்கெட் இழந்து 204 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

தொடர்புடைய செய்தி