இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா ஒருநாள் தொடருக்காக இலங்கை புறப்பட்டு சென்றார். அவர் மும்பை விமான நிலையத்திற்கு செல்லும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உலகக் கோப்பை வென்ற பிறகு சில நாட்களுக்கு முன்பு, ரோகித் சர்மா தனது குடும்பத்துடன் அமெரிக்காவிற்கு விடுமுறைக்கு சென்றார். சமீபத்தில் வீடு திரும்பி ஓய்வெடுத்தார். ஒருநாள் தொடர் ஆகஸ்ட் 2ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.