நடைமேடையில் தறிகெட்டி ஓடிய லாரி.. 3 பேர் உடல்நசுங்கி பலி

77பார்த்தது
புனே: வகோலி பகுதி நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் மீது லாரி ஏறியதில் 2 குழந்தைகள் உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று நள்ளிரவு குடிபோதையில் இருந்த லாரி ஓட்டுநர் நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்த அமராவதியை சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்களின் குடும்பத்தின் மீது ஏற்றியதில் 3 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 6 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி