உத்தரப் பிரதேசம்: தனது காதலியுடன் ரகசியமாக பேசிய நண்பரை, மதுபானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார். ஃபேஸ்புக் மூலம் பழக்கமான பெண்ணை, விஷால் என்பவர் காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில், தனது அனுமதியின்றி காதலியின் தொலைபேசி எண்ணை திருடிய நண்பர் கவுதம், ரகசியமாக காதலியுடன் பேசியதாக தெரிகிறது. இதனைப் பார்த்த விஷால், மதுவில் விஷம் கலந்து கொடுத்து கவுதமை கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.