அமெரிக்காவை சேர்ந்த அலிசா மெக்காமன் என்ற பள்ளி ஆசிரியைக்கு 12ஆம் வகுப்பு மாணவனை பலாத்காரம் செய்து கர்ப்பம் தரித்த குற்றத்திற்காக 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 21 குற்றசாட்டுகள் அவர் மீது விதிக்கப்பட்ட நிலையில் 5 குற்றசாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டுள்ளார். பாதிக்கப்பட்ட அந்த 12 வயது மாணவனை 200 முறைக்கும் மேல் தொடர்புகொண்டும், ஸ்னாப் சாட்டில் நிர்வாண புகைப்படங்களையும் அனுப்பியுள்ளார். 2021-ல் அவர் மீது குற்றம்சாட்டப்பட்ட நிலையில், தற்போது தண்டனை வழங்கப்பட்டுள்ளது.