திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சிறப்பு பூஜை செய்து தருவதாக ஃபேஸ்புக்கில் வந்த விளம்பரத்தை நம்பி பெங்களூருவைச் சேர்ந்த 59 வயதான பேராசிரியர் ரூ.5.2 லட்சம் பணம் கொடுத்து ஏமாந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனைவிக்கு சர்பிரைஸ் கொடுக்க நினைத்து, விளம்பரத்தில் இருந்த எண்ணை தொடர்புகொண்டபோது கோயில் அர்ச்சகர் எனக் கூறி ஒருவர் பேசியதைக் கேட்டு பணத்தை அனுப்பியுள்ளார். பிறகு, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.