2023ஆம் ஆண்டு 'புஷ்பா' படத்திற்காக அல்லு அர்ஜுனுக்கு வழங்கப்பட்ட தேசிய விருதை திரும்ப பெற வேண்டும் என கருத்துக்கள் எழுந்துள்ளது. தெலங்கானா MLC தேன்மார் மல்லண்ணா என்பவர், புஷ்பா படத்தில் சந்தன மர கடத்தலை ஊக்குவிக்கும் படி இருப்பதால், அவ்விருதை திரும்ப பெற வேண்டும் என தெரிவிக்கிறார். மேலும், 'புஷ்பா 2' பார்க்கச் சென்று திரையரங்கில் பெண் ஒருவர் உயிரிழந்தததை தொடர்ந்து அல்லு அர்ஜூன் கடும் நெருக்கடியில் சிக்க, அவர் மீது குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்து எழுகின்றன.