பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கத்தில், சூரி நடித்துள்ள "கொட்டுக்காளி" படத்தின் முன்னோட்ட நிகழ்வில் பேசிய இயக்குனர் மிஷ்கின், "இப்படத்திற்காக நான் நிர்வாணமாக ஆட தயார் என தெரிவித்துள்ளார். ஆனால் தான் நிர்வாணமாக ஆடினால் நன்றாக இருக்காது. எனவே அனைவரும் படத்தை பார்ப்பது அதைவிட சிறந்தது என பேசி உள்ளார். மிஸ்கினின் இந்தப் பேச்சு கோலிவுட் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. "கொட்டுக்காளி" திரைப்படம் ஆகஸ்ட் 23ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.