அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கான கட்டணங்களை 50% உயர்த்தியிருப்பது ஏற்புடையதல்ல என ரவிக்குமார் எம்.பி. தெரிவித்துள்ளார். உயர்கல்வியில் தமிழ்நாட்டுக்குப் பெருமை தேடித் தந்துள்ள அண்ணா பல்கலைக்கழகத்துக்குத் தேவையான நிதியை அளிக்க வேண்டும் வேண்டியது தமிழ்நாடு அரசின் கடமை. அதைவிடுத்து மாணவர்களின் மேல் சுமையை ஏற்றுவது கூடாது. கட்டண உயர்வை உடனே திரும்பப் பெற வேண்டுமென எக்ஸ் பதிவில் வலியுறுத்தியுள்ளார்.