இடம் வெல்லவில்லை, இதயங்கள் வென்றிருக்கிறோம் - சுரேஷ் காமாட்சி

52பார்த்தது
இடம் வெல்லவில்லை, இதயங்கள் வென்றிருக்கிறோம் - சுரேஷ் காமாட்சி
இடம் வெல்லவில்லை என்ற தொய்வில்லாமல் இதயங்கள் வென்றிருக்கிறோம் என்ற பெரும் பொறுப்பை நோக்கி ஓடுதலே இனத்தின் விடுதலையைத் தரும் என நாம் தமிழர் கட்சிக்கு தயாரிப்பாளரும், இயக்குநருமான சுரேஷ் காமாட்சி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், 'இறுகி மூடி உயர்த்திய பெருங்கரங்கள் இன்று வெகுவான மக்கள் செல்வாக்கை அள்ளி வந்திருக்கிறது.

தொடக்கம் முதல் சந்தித்த இடர்பாடுகள், இடைச் செங்கற்களின் உருவல்கள், கட்சியின் சின்ன மாற்றம், ஒற்றைச் சிங்கமாய் கூட்டமற்று களம் கண்டது, ஓட்டுக்கு காசற்று, மாசற்று பெற்ற பொன்னான ஓட்டுக்கள். அத்தனையும் இன்று பெற்றுத் தந்திருக்கிறது மாநிலக் கட்சி என்ற அங்கீகாரம். இதற்காக உழைத்த அத்துணை பேரன்பர்களுக்கும் நன்றி நன்றி. அண்ணன் சீமான் மீது நம்பிக்கை வைத்து மரியாதையை உயர்த்திய ஒவ்வொருவருக்கும் நன்றிகள் கோடி' என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி