திருமாவளவன், சீமானுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து!

84பார்த்தது
விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் நாம் தமிழர் கட்சி ஆகியவை மாநில கட்சிகளாக அங்கீகாரம் பெற்றதற்கு திருமாவளவன் மற்றும் சீமானுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்க செல்லும் நடிகர் ரஜினிகாந்த் இன்று (ஜுன் 9) சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு வலுவான எதிர்க்கட்சியை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளார்கள்; இது ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானது. மாநில கட்சி அங்கீகாரம் பெற்றுள்ள மதிப்புக்குரிய சீமான், திருமாவளவன் ஆகியோருக்கு வாழ்த்துகள் என கூறினார். மக்களவை தேர்தலில் விசிக இரண்டு தொகுதிகள் வெற்றி பெற்று மாநில கட்சி அங்கீகாரம் பெற்றுள்ளது. அதே போல் நாதக, 8.22% வாக்குகள் பெற்று மாநில கட்சி அங்கீகாரம் பெற்றுள்ளது.

நன்றி வீடியோ: NewsTamilTV24x7

தொடர்புடைய செய்தி