ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் ஆடி திருக்கல்யாண திருவிழா கடந்த மாதம் 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், விழாவின் நிறைவாக நாளை (ஆகஸ்ட் 14) சுவாமி, அம்பாள் மறு வீட்டிற்கு ராமர் பாதம் மண்டகப்படிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. அதற்காக நாளை காலை 6 மணிக்கு சுவாமி- அம்பாள், பெருமாள் தங்ககேடயத்தில் கோவிலில் இருந்து எழுந்தருளிய பின்னர் கோவில் நடை சாத்தப்படுகிறது. இதனால் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.