குளிர்காலத்தில் பலரும் காலில் சாக்ஸ் அணிந்து கொண்டு உறங்குகின்றனர். இது உடல் வெப்பநிலையை உறுதிப்படுத்த உதவுகிறது. உடல் வெப்பநிலையில் உருவாகும் ஏற்ற இறக்கங்கள் தூக்கத்தின் தரத்தை பாதிக்கலாம். இந்த சூழலில் காலில் சாக்ஸ் அணிந்து கொள்வது பாதங்களை வெப்பமாக்கி, ஒட்டுமொத்த உடல் வெப்பத்தையும் பராமரிக்க உதவுகிறது. எனவே சாக்ஸ் அணிந்து கொண்டு தூங்குவதால் விரைவாகவும், ஆழ்ந்து உறங்க முடிவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.