மறைந்த முன்னாள் பிரதமரும், இந்திய பொருளாதார மேதையும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங்கின் உடல் இன்று (டிச. 28) முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, டெல்லியில் 21 குண்டுகள் முழங்க முழுமையான ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி திரௌபதி முர்மு உள்ளிட்ட ஏராளமானோர் மன்மோகன் சிங்கிற்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.