ராமாயணம் விவகாரம் - ஐஐடி மாணவர்களுக்கு ரூ.1.2 லட்சம் அபராதம்

76பார்த்தது
ராமாயணம் விவகாரம் - ஐஐடி மாணவர்களுக்கு ரூ.1.2 லட்சம் அபராதம்
மும்பை ஐஐடி மாணவர்கள் கடந்த மார்ச் 31ம் தேதி தாங்கள் பயிலும் ஐஐடி வளாகத்தில் ராமாயண காவியத்தை நாடகமாக அரங்கேற்றியுள்ளனர். இந்த நாடகமானது கருத்து சுதந்திரம் என்ற பெயரில் முற்றிலுமாக மாற்றி அரங்கேற்றியதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக நாடகத்தை அரங்கேற்றிய பட்டதாரி மாணவர்களுக்கு தலா 1.2 லட்சம் அபராதமும், ஜூனியர் மாணவர்களுக்கு தலா ரூ. 40,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் விடுதி வசதிகளிலிருந்து அவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு பயிலும் ஒரு மாணவர் கூறியதாக பத்திரிகை செய்தியில் வெளியாகி உள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி