திருவாடானை மாரியம்மன் கோயில் ஆடி உற்சவ பூக்குழி திருவிழா.!

51பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை சினேகவல்லிபுரத்தில் அமைந்துள்ள  அருள்மிகு ஸ்ரீ  மாரியம்மன் கோயிலில் ஆடி உற்சவ பூக்குழி திருவிழா கடந்த ஜூலை 23ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

அதனை தொடர்ந்து 8ம் நாளான இன்று பெரிய கோவில் முன்பு உள்ள ஆறாம் மண்டகப்படி மண்டபத்தில் இருந்து நேர்த்தி கடன் செலுத்தும் பக்தர்கள் விரதமிருந்து பால் காவடி, வேல் காவடி, பறவை காவடி, மற்றும் பால்குடம் ஏந்தி வீதி உலா வந்தனர். இந்நிகழ்வில் சிறுவர்கள் பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பின் சினேகவல்லிபுரம் ஸ்ரீ மாரியம்மன் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த பூக்குழியில் இறங்கி பக்தர்கள்  நேர்த்தி கடனை செலுத்தினர். திருவிழாவில் பொதுமக்கள் சுமார் 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்று சென்றனர்.

தொடர்புடைய செய்தி