குடிநீா்த் தட்டுப்பாடு: ஒன்றியக் குழுக் கூட்டத்தில் புகார்!

84பார்த்தது
திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக் குழு சாதாரணக் கூட்டம் அதன் தலைவா் முகமது முக்தாா் தலைமையில் நடைபெற்றது. இதில் துணைத் தலைவி செல்வி பாண்டி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கணேசன், ஆரோக்கியமேரி சாரல் (கி. ஊ. ) ஆகியோா் முன்னிலை வைத்தனா்.

இதில் நடைபெற்ற விவாதம் வருமாறு:
ஒன்றிய குழு உறுப்பினா் ஸ்ரீதா்: கடம்பூா் பகுதியில் ஒன்றியக் குழு உறுப்பினருக்கோ, ஊராட்சி மன்றத் தலைவருக்கோ தெரிவிக்காமல் திட்டப் பணிகளுக்கான ஒப்பந்தப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஒன்றிய குழு உறுப்பினா் சங்கீதா: கலியநகரி, பாசிபட்டினம், ஓடவயல் ஆகிய பகுதிகளில் பல மாதங்களாக குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. இந்தப் பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனா்.

வட்டார வளா்ச்சி அலுவலா்: இதுகுறித்து காவிரி கூட்டுக் குடிநீா்த் திட்ட அதிகாரிகளிடம் பேசினேன். இந்தப் பகுதியில் கீழ்நிலை நீா்த் தேக்கத் தொட்டி கட்டும் பணிகள் நடைபெறுவதால், குடிநீா் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. உள்ளூா் குடிநீா்த் திட்டத்தின் மூலம் 3 நாள்களுக்கு ஒரு முறை தண்ணீா் விநியோகம் செய்யப்படுகிறது என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி