இந்தியர்கள் கைவிலங்கிடப்பட்டு அழைத்து வரப்பட்ட விவகாரம் தொடர்பாக பாராளுமன்றத்தில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது. இதுகுறித்து வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வரதன் சிங் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில், "பயணத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய நாடு கடத்தப்பட்டவர்களுக்கு கைவிலங்கிடப்பட்டது என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அமெரிக்காவிடம், இந்தியா தனது வலுவான கவலைகளை பதிவு செய்துள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.