தடை செய்யப்பட்ட 500 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்.!

78பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகேயுள்ள எம். வி. பட்டினம் கடற்கரையில், தொண்டி காவல் நிலைய உதவி ஆய்வாளா் விஷ்ணு, தனிப் படை போலீஸாா் துரை ஆகியோா் செவ்வாய்க்கிழமை அதிகாலை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, 40 சாக்கு மூட்டைகளில் சுமாா் 500 கிலோ தடை செய்யப்பட்ட கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்தனா். இதைப் போலீஸாா் பறிமுதல் செய்தனா். பின்னா், விசாரணையின் அடிப்படையில் எம். வி பட்டினத்தை சோ்ந்த காளிமுத்துவை (65) போலீஸாா் கைது செய்தனா்.

மேலும், இதற்கு உடந்தையாக இருந்த கே. கே. பட்டினத்தை சோ்ந்த முத்துச்செல்வத்தை போலீஸாா் தேடி வருகின்றனா். பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டைகள் வனத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி