வக்கீலை தாக்கிய திருநங்கைகள்: ராமநாதபுரத்தில் பரபரப்பு.!

5621பார்த்தது
வக்கீலை தாக்கிய திருநங்கைகள்: ராமநாதபுரத்தில் பரபரப்பு.!
ராமநாதபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் இருக்கும் திருநங்கைகளுக்கு வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழிக்கு சமூக நலத்துறை அலுவலர் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனை அறிந்து ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கக்கூடிய திருநங்கைகள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் வளாக பகுதிகளினுடைய சமூக நலத்துறை அலுவலகத்திற்கு வந்தனர்.

மேலும் வாக்காளர் அடையாள அட்டை இல்லாத திருநங்கைகளுக்கு அடையாள அட்டை பெற்று தருவதாகவும், வீட்டு மனை வழங்கப்பட திருநங்கைகளுக்கு வீடு கட்டுவதற்கான அனுமதி பெற்று தருவதாகவும் சமூகத்துறை அலுவலர்கள் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால், வந்திருந்த திருநங்கைகள் சமூக நலத்துறை அலுவலகத்திற்கு சென்ற போது அலுவலர்கள் முறையாக பதில் அளிக்காத நிலையில், அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தேர்தலை புறக்கணிக்க போவதாக ஆவேசமாக பேசிவிட்டு கோபத்துடன் அங்கிருந்து வெளியேறி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருக்கும் கடைகளில் அமர்ந்து டீ அருந்தி கொண்டிருக்கும்போது அங்கு வந்த வழக்கறிஞர் ஒருவர் அவர்களை தரக்குறைவாக பேசியதாக கூறி வந்திருந்த திருநங்கைகள் வழக்கறிஞரை தாறுமாறாக தாக்கினர்.

இதனால் மாவட்ட ஆட்சியர் வளாகப் பகுதியில் பரபரப்பு நிலவியது. இதனையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வழக்கறிஞரை மீட்டு பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி