முன் விரோதம் காரணமாக இளைஞர் வெட்டி கொலை

71பார்த்தது
பரமக்குடி அருகே முன் விரோதம் காரணமாக இளைஞர் வெட்டி கொலை.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள தெளிச்சாத்தநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த சமயமுத்து மகன் மாரிச்செல்வம் (32). இன்னும் திருமணம் ஆகவில்லை. இந்நிலையில் நேற்று இரவு மாரிச்செல்வம் பரமக்குடி அருகே உள்ள சோமநாதபுரம் நான்கு வழி சாலையில் நண்பர்களுடன் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் மாரிச் செல்வத்தை சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் மாரிச்செல்வம் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். இந்நிலையில் பாண்டிக் கண்மாய் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் மகன் கடுக்கன் கார்த்தி மற்றும் அக்கிரமிசி கிராமத்தைச் சேர்ந்த நாராயணன் மகன் சரவணன் ஆகிய இருவரும் மாரிச்செல்வத்தை வெட்டி கொலை செய்ததாக பரமக்குடி தாலுகா காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். இதனால் தெளிச்சாத்த நல்லூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து பரமக்குடி டி. எஸ். பி. சபரிநாதன் தலைமையில் போலீசார் சம்பவத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் மாரிச் செல்வத்திற்கும் கடுக்கன் கார்த்திக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மண் அள்ளுவதில் தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்துள்ளது. அதனால் அவர் வெட்டி கொலை செய்யப்பட்டதாக தெரிய வந்துள்ளது. இது குறித்து எமனேஸ்வரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி