ஷஹீத் ஒலியுல்லாஹ் தர்கா கந்தூரி விழா கொடியேற்றம்.!

76பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் உள்ள 18 வாலிபர்கள் ஷஹீத் ஒலியுல்லாஹ் தர்காவின் கந்தூரி விழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இந்த விழாவில் சாதி மதங்களைக் கடந்து அனைவரும் ஒன்றுபட்டு கலந்து கொள்ளும் மத நல்லிணக்க விழாவாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இந்த தர்காவின் 850 ஆம் ஆண்டு கந்தூரி விழாவானது இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.


குதிரை நாட்டியம், பாரம்பரிய நடனம் வண்ண வண்ண விளக்குகள் என விழா மையம் பூண்டுள்ள பகுதியில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர். இவ்விழாவின் முக்கிய நிகழ்வான கந்தூரி விழா எதிர்வரும் 24 ஆம் தேதி அன்று நடைபெற உள்ள நிலையில், விழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி