பழுதான அரசு பேருந்து பாதி வழியில் இறக்கி விடப்பட்ட பயணிகள்
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இருந்து மாலை 5 மணிக்கு சத்திரக்குடி அருகே உள்ள வளநாடு நோக்கி சென்ற அரசு பேருந்து திடீரென பழுதாகி மஞ்சூரில் பயணிகள் இறக்கி விடப்பட்டனர் இதனால் பெண்கள் சுமார் ஒரு மணி நேரம் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டது மேலும் இது குறித்து அரசை விமர்சனம் செய்த பெண்கள் இலவசமாக வந்தாலே இப்படித்தான் இடைவெளியில் இறக்கி விடுவார்கள் இதுவே ஒரு வாடிக்கையாக்கி போய்விட்டது ஓட்டு போட்டு எங்களுக்கு என்ன புண்ணியம் என குற்றம் சாட்டி வருத்தம் தெரிவித்த பெண்கள் கன்னத்தில் கை வைத்துக் கொண்டு சோகத்தில் பல மணி நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது