ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய இன்று அரிய வாய்ப்பு

71பார்த்தது
ரேஷன் கார்டில் திருத்தம் செய்ய இன்று அரிய வாய்ப்பு
தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படும். அந்த வகையில் அக்டோபர் மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் இன்று (அக்.19) தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. இதில் கலந்து கொண்டு ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், ஊர் மாற்றம் செய்வது போன்ற திருத்தங்களை செய்து கொள்ளலாம். இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் தனித்தனியாக அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர்.