ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தீவை இணைக்கும் வகையில் மண்டபம் அடுத்த பாம்பனில் புதிதாக செங்குத்து தூக்கு பாலத்துடன் கூடிய புதிய ரயில் பாலம் கட்டப்பட்டு வருகிறது. பணிகள் கிட்டத்தட்ட முடிவடைகின்ற தருணத்தில் செங்கு தூக்குப்பாலத்தை ஹைட்ராலிக் ஜாக்கி வைத்து சிறிது சிறிதாக ஊழியர்கள் தூக்கி வைக்கின்றனர். இன்னும் சில மாதங்களில் புது பாம்பன் பாலம் பொது மக்களின் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது எனவே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்