ரயில்வே ஸ்டேஷன் அருகே கருவேல மரங்கள்: விஷப்பூச்சிகள் தொல்லை!

67பார்த்தது
ரயில்வே ஸ்டேஷன் அருகே கருவேல மரங்கள்: விஷப்பூச்சிகள் தொல்லை!
பரமக்குடி ரயில்வே ஸ்டேஷன் பகுதிகளில் தொடர்ந்து வரும் கருவேல மரங்களால் அப்பகுதியில் விஷ பூச்சிகள் நடமாட்டத்தால் குடியிருப்போர், பயணிகள் அச்சத்தில் உள்ளனர்.

பரமக்குடி ரயில்வே ஸ்டேஷன் மதுரை-ராமேஸ்வரம் மார்க்கத்தில் அதிகமான வருமானம் ஈட்டி தரும் இடமாக உள்ளது. மேலும் ஸ்டேஷன் முழுவதும் நவீனமயமாக்கப்பட்டு பல்வேறு திட்ட பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஸ்டேசனை ஒட்டி நகராட்சி 30-வது வார்டு உள்ளது. தொடர்ந்து ஸ்டேஷனுக்கும், 30வது வார்டுக்கு இடைப்பட்ட ரயில்வே இடத்தில் அதிகப்படியான கருவேல மரங்கள் வளர்ந்து காடாகியுள்ளது.
இதே போல் ரயில்வே டிராக் அமைந்துள்ள இரண்டு ஓரங்களிலும் கருவேல மரங்கள் வளந்துள்ளன.

இதனால் குடியிருப்பு பகுதிகளில் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகள், விஷப்பூச்சிகள் என மக்களை அச்சுறுத்தி வருகிறது. மேலும் மழை நீர் கழிவு நீருடன் கலந்து குட்டையாக தேங்கி நிற்கும் சூழலில் அகற்ற முடியாத நிலையில் உள்ளது. தொடர்ந்து அப்பகுதிகளில் சமூக விரோத செயல்களும் நடக்க ஏதுவாகிறது. பகல், இரவு நேரங்களில் கருவேல மரங்களுக்கு இடையே மறைவான இடத்தில் பொதுக் கழிப்பிடமாகவும் பயன்படுத்தும் நிலை இருக்கிறது.

இதனால் ரயில் பயணிகளும் அச்சத்தில் இருக்கின்றனர். ஆகவே ரயில்வே நிர்வாகம் கருவேல மரங்களை அப்புறப்படுத்தி பயணிகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

தொடர்புடைய செய்தி