தனுஷின் ராயன் ரிலீஸ் தேதியில் மாற்றம்

79பார்த்தது
தனுஷின் ராயன் ரிலீஸ் தேதியில் மாற்றம்
பவர் பாண்டி படத்தை தொடர்ந்து தனுஷ் இயக்கியுள்ள இரண்டாவது படம் இதுவாகும். இதற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில், வரும் ஜுலை 26ம் தேதி ராயன் திரைப்படம் வெளியாகும் என சன்பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. முன்னதாக இப்படம் ஜூன் 13 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் படப்பிடிப்பு, எடிட்டிங் என அனைத்து பணிகளும் முடிவடைந்து, ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில் ரிலீஸ் தேதி தள்ளிப்போயுள்ளது.