மின் கம்பத்தில் நின்றவாறு இளைஞர் உயிரிழப்பு (வீடியோ)

69பார்த்தது
ராஜஸ்தானின் கெக்ரி மாவட்டத்தில் நேற்று (ஜூன் 9) ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. மசூடா பகுதியில் உள்ள பந்தன்வாடா சுங்கச்சாவடிக்கு அருகில் உள்ள கேடி கிராமத்தில் லைன்மேன் ஒருவர் மின்கம்பத்தில் ஏறி வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் மின்கம்பத்தில் சிக்கி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அவர் இறந்து 4 மணி நேரமாகியும், சடலம் எடுக்கப்படவில்லை. இதனால், மின்வாரிய அதிகாரிகளின் செயல்பாடு கடும் கண்டனத்துக்கு உள்ளாகி வருகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி