நாடு முழுவதும் மக்களவை தேர்தல் நடந்து முடிந்த நிலையில், தமிழகத்தில் புதிய ரேஷன் அட்டை வழங்கும் பணி இன்று முதல் தொடங்கியுள்ளது. இதனால் புதிய ரேஷன் அட்டை பெறுபவர்களும் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம். இதன்பின், தகுதியான குடும்பத் தலைவிகளின் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படும். அதில் தகுதிபெறும் குடும்பத் தலைவிகளை மகளிர் உரிமைத் திட்டத்தில் இணைத்து, ஜூலை அல்லது ஆகஸ்ட்டில் இருந்து ரூ.1000 வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.