ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு அவர்களுக்கு ராமநாதபுரம் மாவட்ட விசிக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பின்பு பரமக்குடி பாம்புவிழுந்தான் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் ரமே. பிரபாகரன் இல்லம் முன்பு ஏற்பாடு செய்யப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடியை ஏற்றி இனிப்பு வழங்கினார்.
பின்னர் சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் பரமக்குடி நகராட்சிக்குட்பட்ட வார சந்தை பகுதியில் சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனாருக்கு அரசு சார்பில் கட்டப்பட்ட வரும் 3 கோடி மதிப்பீட்டில் உள்ள மணி மண்டபத்தை ஆய்வு செய்து பார்வையிட்டார். உடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ராமநாதபுரம் மாவட்ட செயலாளர்களான ரமே. பிரபாகரன், அற்புத குமார், தேவேந்திர பண்பாட்டுக் கழகச் செயலாளர் வழக்கறிஞர். புண்ணியமூர்த்தி, ஒன்றிய செயலாளர்களான இப்ராகிம், மணிமாறன், குணாளன். மாவட்ட பிரதிநிதி கோதண்டபாணி உள்ளிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் ஏராளமானோர் உடனிருந்தனர்.