பெண்கள் கபடி போட்டி: கண்டு ரசித்த பார்வையாளர்கள்.!

58பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அடுத்துள்ள கன்னிராஜபுரம் சத்திரிய இந்து நாடார் உறவின்முறைக்குப் பாத்தியப்பட்ட ஸ்ரீசித்திவிநாயகர், ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீநிவாசபெருமாள், ஸ்ரீஉஜ்ஜைனி மாகாளியம்மன் கோயில் கொடைவிழா கடந்த செப். 6 ஆம் தேதி காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது.

இதனை முன்னிட்டு மூலவருக்கும் பரிவார தெய்வங்களுக்கும் நாள்தோறும் சிறப்பு பூஜைகள், பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இவ்விழாவினை முன்னிட்டு கடந்த இரு நாட்களாக மாநில அளவிலான பெண்கள் கபடி போட்டி நடைபெற்றது.

இதில் மதுரை, கரூர், திண்டுக்கல், தேனி, சேலம், ஈரோடு, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட 12 மாவட்டங்களைச் சேர்ந்த பெண்கள் அணி பங்கேற்றது.

இறுதிப்போட்டியில் கோபிசெட்டிபாளையம் பி. கே. ஆர். மகளிர் கல்லூரி அணி வெற்றி பெற்று, முதலிடம் பிடித்தது. முதலிடம் பிடித்த அணிக்கு ரூ. 60 ஆயிரம் பணம் பரிசாக வழங்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் எஸ். எம். வி. கே. சி கல்லூரி இரண்டாமிடத்தையும், நெல்லை பாரதி ஸ்போர்ட்ஸ் அணி மூன்றாமிடத்தையும், கரூர் அரசு மகளிர் கல்லூரி நான்காம் இடத்தையும் பெற்றது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி