கமுதி அருகே வடமாடு எருதுகட்டு விழா.!

85பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே K. வேப்பங்குளம் கிராமத்தில் உள்ள அரியநாச்சிஅம்மன் கோவில் ஆனி திருவிழாவை முன்னிட்டு இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் வடமாடு எருதுகட்டு விழா நடைபெற்றது.

100 அடி நீள வட கயிற்றில் ஒரு பக்க கயிற்றில் கட்டப்பட்ட காளையை மறுபக்க பகுதியை வடம் பிடிப்பவர்கள் காளைகள் மைதானத்தை விட்டு ஓட முடியாத அளவில் பிடிப்பார்கள் வடத்தில் கட்டப்பட்ட ஓடும் காளையை மாடுபிடி வீரர்கள் பிடிக்க வேண்டும்.

இன்று நடந்த வடமாடு எருதுகட்டு விழாவில் 25 காளைகள் கலந்து கொண்டன. இந்த காளைகளை அடக்க 100க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். அனைத்து காளைகளும் பிடிப்பட்டன. 4 மாடுபிடி வீரர்கள் லேசான காயமடைந்தனர்.

இந்த வடமாடு எருதுகட்டு விழாவிற்கு மதுரை. சிவகங்கை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து காளைகள் வந்து இருந்தன. இந்த எருது கட்டு விழாவை பெண்கள், சிறுவர்கள், முதியோர் உள்ளிட்ட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கண்டு ரசித்தனர்.

தொடர்புடைய செய்தி