ராமநாதபுரம்: பள்ளி வளாகத்தில் முற்றுகையிட்டு தர்ணா

69பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த பேய்க்கரும்பு பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளி கழிப்பிடத்தில் தகாத வார்த்தைகளில் சில வாசகங்கள் இருப்பதை கண்ட ஆறாம் வகுப்பு பள்ளி மாணவர்கள் சிரித்துக் கொண்டே கழிப்பறையை விட்டு வெளியே வந்துள்ளனர்.

இதனை கண்ட ஒரு ஆசிரியர் மாணவர்கள் சிரித்துக் கொண்டே வெளியே வந்ததை கண்டு உள்ளே சென்று ஆசிரியர் பார்த்த போது கழிப்பறையில் தகாத வார்த்தைகளால் சில வாசகங்கள் எழுதியிருந்ததை கண்டு சிரித்துக் கொண்டே வந்த பள்ளி மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் ஷாலினி இரண்டு நாட்களாக தனது அறையில் வைத்து சுமார் ஆறுக்கும் மேற்பட்ட மாணவர்களை தினம் தோறும் அடித்ததாக கூறப்படுகிறது.

இதில் ஒரு மாணவனுக்கு உடல் முழுவதும் காயம் ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து மாணவரின் உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் தனியார் பள்ளியின் பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டு தர்மபுரட்டத்தில் ஈடுபட்டு நியாயம் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த ராமேஸ்வரம் காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் பள்ளி நிர்வாகம் மற்றும் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவரின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதைத் தொடர்ந்து சைல்ட் லைன் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் சைட்லைன் அதிகாரிகள் மாணவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி தற்போது இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி