கமுதியில் நீத்தாா் நினைவு தினம் அனுசரிப்பு.!

54பார்த்தது
கமுதியில் நீத்தாா் நினைவு தினம் அனுசரிப்பு.!
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி தீயணைப்பு நிலைய அலுவலக வளாகத்தில் தீயணைப்புத் துறையில் வீரமரணம் அடைந்தவா்களுக்கு நீத்தாா் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

இதற்கு நிலைய அலுவலா் சந்திரசேகரன், நிலைய போக்குவரத்து அலுவலா் நாகநாதன் ஆகியோா் தலைமை வகித்தனா். முன்னணி தீயணைப்பு வீரா்கள் பழனி, உத்தண்டசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கடந்த 1944- ஆம் ஆண்டு இரண்டாம் உலகப் போரின் போது மும்பை துறைமுகத்தில் நிறுத்தப் பட்டிருந்த வெடிமருந்து ஏற்றிய கப்பல் திடீரென்று தீப்பற்றி எரிந்தது. இதில் தீயணைப்புத்துறை வீரா்கள் 66 போ் உயிரிழந்தனா். இதை நினைவு கூறும் வகையில் இந்தியா முழுவதும் ஏப்ரல் 14- ஆம் தேதி முதல் 20- ஆம் தேதி வரை நீத்தாா் நினைவு தினம் அனுசரிக்கப் படுகிறது.

மேலும் தமிழகத்தில் இதுவரை 33 வீரா்கள் தீயணைப்பு, மீட்புப் பணிகளில் ஈடுபட்டிருந்த போது வீரமரணம் அடைந்துள்ளனா். இவா்களை நினைவு கூறும் வகையிலும் கமுதி தீயணைப்பு, மீட்பு பணிகள் நிலையத்தில் நீா்த்தாா் நினைவுத் தூண் அமைத்து மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் தீயணைப்புத்துறை அலுவலா்கள், வீரா்கள் கலந்து கொண்டனா்.