அய்யனார் புரவி எடுப்பு திருவிழா: வடமாடு எருதுகட்டு போட்டி.!

56பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கிடாதிருக்கை கிராமத்தில் உள்ள நிறைகுளத்து அய்யனார் மற்றும் தர்மமுனீஸ்வரர் ஆலய புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு வடமாடு எருதுகட்டு விழா நடைபெற்றது.

ராமநாதபுரம், விருதுநகர், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட 22 காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டது.

காளைகளை 40 பேர் வடம் கட்டி அதை எல்லை தாண்டாத வகையில் பிடித்து 15 மாடுபிடி வீரர்கள் காளைகளை அடக்கினர். காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கு ரொக்கப்பணம், சில்வர் அண்டா உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது.

வடமாடு எருது கட்டு விழாவினை முதுகுளத்தூர் கடலாடி கமுதி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

தொடர்புடைய செய்தி