ஆடி கிருத்திகை: பறவை காவடி எடுத்த பக்தர்கள்.!

70பார்த்தது
ஆடி கிருத்திகையை முன்னிட்டு கொடுமலூர் குமர கடவுளுக்கு 30 கிலோமீட்டர் பறவை காவடி 108 பால்குடம் எடுத்து நேர்த்திகடன் செலுத்திய பக்தர்கள்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கொடுமலூர் குமர கடவுள் ஆலயத்தில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு பரமக்குடி சக்தி குமரன் முருகன் ஆலயத்தில் இருந்து பாதயாத்திரையாக பக்தர்கள் பறவைக்காவடி மற்றும் 108 பால் குடங்களுடன் 30 கிலோமீட்டர் பாதயாத்திரையாக வந்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர்.

அதன் பின், குமரக் கடவுள் முருகனுக்கு சந்தன, மெழுகு, தைலம், எலுமிச்சம், பழச்சாறு, திரவியப்பொடி உட்பட 108 சங்கு தீர்த்தம்
உள்ளிட்ட 33 அபிஷேகங்கள் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி