சென்னை புரசைவாக்கத்தில் செயல்பட்ட அபிராமி திரையரங்கம் பிரபல தயாரிப்பாளர் அபிராமி ராமநாதனுக்கு சொந்தமானது. 1976-ல் சிவலிங்கம் செட்டியாரால் அபிராமி மற்றும் பால அபிராமி திரையரங்கங்கள் கட்டப்பட்டன. அதன் வெற்றியைப் பார்த்து 1982-ல் அன்னை அபிராமி மற்றும் சக்தி அபிராமி ஆகிய திரையரங்குகள் கட்டப்பட்டன. அதன் பிறகு 2002-ல் அபிராமி மெகா மால் கட்டப்பட்ட நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் திரையரங்கம் மூடப்பட்டது.