திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள நெல்லையப்பர் கோவிலில் யானை உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இன்று (ஜன.12) உயிரிழந்தது. 56 வயதான கோயில் யானை காந்திமதி வயது காரணமாக உடல் எடை அதிகரிப்பு, மூட்டு வலி போன்றவற்றால் அவதிப்பட்டு வந்த நிலையில் உயிரிழந்தது. இந்நிலையில் யானை உயிரிழந்ததை தாங்கிக்கொள்ள முடியாமல் யானை பாகன் மற்றும் சில பெண் பக்தர்கள் கதறி அழுத சம்பவம் காண்போரை கண்கலங்கச்செய்துள்ளது.