உலகின் எந்த நாட்டிற்கும் செல்ல, பாஸ்போர்ட் வைத்திருப்பது மிக முக்கியம். இந்திய அரசு மொத்தம் 4 வகையான பாஸ்போர்ட்களை விநியோகிக்கிறது. அதன்படி நீல பாஸ்போர்ட், ஆரஞ்சு பாஸ்போர்ட், வெள்ளை பாஸ்போர்ட் மற்றும் தூதரக பாஸ்போர்ட் ஆகியவை வழங்கப்படுகிறது. பெரும்பாலான மக்களுக்கு நீல நிற பாஸ்போர்ட் மட்டுமே வழங்கப்படுகிறது. இது மிகவும் பொதுவான பாஸ்போர்ட் மற்றும் சாதாரண குடிமக்களுக்கு வழங்கப்படுகிறது.