திருநெல்வேலி மாவட்டம் நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி உடல்நிலைக்குறைவால் உயிரிழந்தது. 56 வயதான கோயில் யானை காந்திமதி வயது காரணமாக உடல் எடை அதிகரிப்பு, மூட்டு வலி போன்றவற்றால் அவதிப்பட்டு வந்தது. காந்திமதிக்கு மருத்துவக் குழு தீவிர சிகிச்சை அளித்தபோதும் உயிரிழந்துள்ளது. கடந்த 1985ஆம் ஆண்டு நயினார் பிள்ளை என்பவரால் கோயிலுக்கு யானை நன்கொடையாக அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.