பொங்கலையும் திமுகவையும் பிரிக்க முடியாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பொங்கல் வாழ்த்து செய்தியில், திராவிட இயக்கம் மிக உற்சாகத்தோடு கொண்டாடும் ஒரு திருநாள் என்றால் அது பொங்கல் திருநாள்தான். ஏனென்றால், இதில் மதம் இல்லை. சாதி இல்லை. வன்முறை இல்லை. உழைப்பை போற்றும் தத்துவம்தான் இருக்கிறது. சமத்துவம் இருக்கிறது. தமிழர்களின் பண்பாடும் வீரமும் கொண்டாட்டமும் நிறைந்த விழா என கூறியுள்ளார்.