பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு ஆதார் எண் பதிவு செய்யும் பணி.!

68பார்த்தது
பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு ஆதார் எண் பதிவு செய்யும் பணி.!
கமுதி தாலுகாவில் உள்ள அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் என மொத்தம் 175 பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆதார் எண் பதிவு செய்யும் பணிகளை கமுதி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவி தமிழ்ச்செல்வி போஸ் தொடங்கி வைத்தார்.

இந்தப் பள்ளிகளில் முதல் வகுப்பில் சேரும் புதிய மாணவர்கள், ஏற்கெனவே படித்துக் கொண்டிருக்கும் மாணவ, மாணவிகளுக்கு புதிய ஆதார் எண் பதிவு, ஆதார் அட்டைகளில் திருத்தம், புதுப்பித்தல், ஆதார் இனையத்தளத்தில் பதிவேற்றறம் செய்தல் உள்ளிட்ட பணிகளை அந்தந்த பள்ளிகளிலேயே செய்துதர தமிழக அரசு உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து ராமசாமிபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் கமுதி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவி தமிழ்ச்செல்வி போஸ் மாணவர்களுக்கான ஆதார் அட்டை புதுப்பிக்கும் பணியை தொடங்கி வைத்தார். மேலும் ஆதார் அட்டை புதுப்பிக்கும் பணிக்காக கமுதி இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் அபிநயாவுக்கு முறைறயாக பயிற்சி அளிக்கப்பட்டு, அனைத்துப் பள்ளிகளிலும் இந்தப் பணியை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டிருப்பதாக இல்லம் தேடி கல்வி கமுதி வட்டார ஒருங்கிணைப்பாளர் சி. கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.
இந்த நிகழ்வில், ராமசாமிபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராமசாமிபாண்டியன், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி