ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் முத்துராமலிங்கத் தேவா் நினைவிடத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு அதிமுக சாா்பில் 2014-ஆம் ஆண்டு ரூ. 4. 50 கோடியில் 13 கிலோ எடையுள்ள தங்கக் கவசத்தை மறைந்த முன்னாள் முதல்வா் புரட்சி தலைவி ஜெயலலிதா அணிவித்தாா்.
இந்த தங்க கவசமானது குரு பூஜை விழாவுக்குப் பிறகு, மதுரையில் உள்ள வங்கிப் பெட்டகத்தில் இந்தக் கவசம் வைக்கப்பட்டு, பாதுகாக்கப்படும். பின்னா், குரு பூஜை விழாவின் போது, இந்த தங்கக் கவசம் போலீஸ் பாதுகாப்புடன் மதுரையில் இருந்து பசும்பொன்னுக்கு எடுத்துச் சென்று, தேவா் சிலைக்கு அணிவிப்பது வழக்கம்.
இதன்படி, இந்த ஆண்டு அக். 30ம் தேதிபசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 117 வதுஜெயந்தி விழா 62 வது குரு பூஜை விழாயொட்டி, இந்த தங்கக் கவசம் அதிமுகவின் பொருளாளா் திண்டுக்கல் சீனிவாசன், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவா் நினைவிடப் பொறுப்பாளா் காந்திமீனாள் அம்மாள் முன்னிலையில் வங்கியிலிருந்து எடுத்துவரப்பட்டு, பசும்பொன்னில் உள்ள தேவா் சிலைக்கு அணிவித்து, சிறப்பு பூஜை நடைபெற்றது