மூக்கையூரில் ஆழ்கடல் மீன் பிடி துறைமுகம் காட்சிப் உள்ளது

73பார்த்தது
மூக்கையூரில் ஆழ்கடல் மீன் பிடி துறைமுகம் அமைக்கப்பட்டது. மன்னார் வளைகுடா கடலில் பெரிய பாறைகளால் கடலுக்குள் 500 மீ. , சாலை அமைத்து முக்கோண அலைதடுப்பு கற்கள் அமைக்கப்பட்டுள்ள
பாம்பன், ராமேஸ்வரம், தங்கச்சிமடம் பகுதிகளில் ஆழ்கடல் மீன்பிடிப்பை போன்று மூக்கையூர் துறைமுகத்திற்கு இயற்கையாகவே தொலை துாரங்களுக்கு சென்று தங்கி மீன்பிடித்து விட்டு திரும்பும் வகையில் உள்கட்டமைப்பு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு நுாறுக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் நிறுத்துவதற்கு ஏற்ற வகையில் படகு குழாம் உள்ளது.


ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ள மீனவர்களின் நலனுக்காக அமைக்கப்பட்ட மீன்பிடி துறைமுகம் தற்போது பராமரிப்பின்றி காட்சி பொருளாக மாறும் நிலையால் அரசு நிதி வீணடிக்கப்பட்டு வருகிறது. 2022-ல் ரூ. 10 கோடியில் அமைத்த பெரிய ரக மீன்களை பதப்படுத்துவதற்கான குளிர்சாதன அறை பயன்பாடின்றி உள்ளது.

ஐஸ் கட்டி தயாரிக்கும் மையமும் காட்சிப் பொருளாக உள்ளது. ஜெனரேட்டர் வசதி முற்றிலும் இல்லை. இதனால் மின்வாரியத்தை மட்டுமே நம்பி இருக்க வேண்டியுள்ளது.

இதே போல் மற்றொரு புறம் கடலுக்குள் சாலை அமைக்கப்பட்டுள்ளது. மீன்பிடி துறைமுகத்திற்கான நிர்வாக அலுவலகம், வலை பின்னும் கூடம், வலை உலர்த்தும் அறை, விசைப்படகு நிறுத்துவதற்கான தளம் உள்ளிட்டவைகள் கடல் பகுதியை ஒட்டியே அமைக்கப்பட்டுள்ளது. மூக்கையூர் பகுதி மீனவர்கள் கூறியதாவது:

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி