பெருநாழி அருகே காரில் ஆயுதங்களுடன் வந்த 12 பேரை போலீஸôர் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பெருநாழி அடுத்துள்ள துத்திநத்தம் விலக்கு சாலையில் பெருநாழி போலிஸôர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெருநாழியிலிருந்து வந்த யுனோவா காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில் காருக்குள் அரிவாள், பெப்பர் ஸ்பிரே உள்ளிட்டவை இருந்தது தெரியவந்தது. மேலும் பெருநாழி பகுதியில் கொள்ளைச் சம்பத்தில் ஈடுபட வந்ததாக காரில் இருந்த இளைஞர்கள் வாக்குமூலம் அளித்ததாக போலீஸôர் தெரிவித்தனர்.
இது தொடர்பாக காரில் இருந்த இடிவிலகியை சேர்ந்த செல்ந்தில் மகன் ரமேஷ் கண்ணன்(19), காளிமுத்து மகன் சரவணன்(30), மதுரை காமராஜர்புரத்தைச் சேர்ந்த முத்து மகன் குட்டமணி, பாலமுருகன் மகன் யோகேஷ்வரன், அழகர்சாமி மகன் பாலமுருகன்(21), கோவிந்தராஜ் மகன் பாரதி சந்தோஷ், ஞானவேல் மகன் வீரக்குமார் என்ற பிரகாஷ், மதுரை முனிச்சாலையை சேர்ந்த முகமது பாக்ஸ் மகன் அல்ஜுபைர்(18), முத்துக்குமார் மகன் கருணாகரன்(19), மதுரையை சேர்ந்த விஷால்குமார்(19), வழிவிட்டான் மகன் சரவணன், பொந்தம்புளியை சேர்ந்த ராமர் மகன் கவி(20) உள்ளிட்ட 12 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து கார், ஆயுதங்களை போலீஸôர் பறிமுதல் செய்தனர்.