முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு நாணயத்தை நாளை ஆகஸ்ட் 17 சென்னையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட உள்ளார். அதற்கு முன்னதாக சென்னை மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்துகிறார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.