10 மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் மழை

557பார்த்தது
10 மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் மழை
தமிழ்நாட்டின் 10 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தென் தமிழக உள் மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (மே 20) சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி