பழனியில் கிரிவலம் வந்த கோவில் காளை

75பார்த்தது
பழனியில் கிரிவலம் வந்த கோவில் காளை
திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் தீர்த்தக்காவடிகள் எடுத்து வந்து அபிஷேகம் செய்து வருகின்றனர். அந்த வகையில், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மணக்கடவு பகுதி பக்தர்களும் தீர்த்தக்காவடி எடுத்து வந்த நிலையில், நேற்று (மே 19) வீரக்குமார சுவாமி கோவில் காளையை மலர்களால் அலங்கரித்து கிரிவலம் வர செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி