வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

54பார்த்தது
வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு
மக்களவை தேர்தலுக்கான ஐந்தாவது கட்ட வாக்குப்பதிவு இன்று (மே 20) நடைபெறுகிறது. இந்நிலையில் பிரதமர் மோடி வாக்காளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். 2024 மக்களவைத் தேர்தலின் 5வது கட்டமாக 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. "இன்று வாக்குப்பதிவு நடைபெறும் தொகுதிகளில் உள்ள அனைத்து வாக்காளர்களும் ஜனநாயக கடமையாற்ற வேண்டும். திரளாக வந்து வாக்களித்து ஜனநாயகத்தை வலுப்படுத்துவோம்" என அவர் ட்வீட் செய்துள்ளார்.

தொடர்புடைய செய்தி