ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் நிலை என்ன?

562பார்த்தது
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் நேற்று (மே 19) விபத்தில் சிக்கிய சம்பவத்தில், விபத்து நடந்ததாக கூறப்படும் இடத்தை டிரோன் உறுதி செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஹெலிகாப்டர் விழுந்து வெடித்துச் சிதறியதாக கூறப்படும் இடத்தை துருக்கியின் டிரோன் விமானம் கண்டுபிடித்துள்ளது.

மோசமான வானிலை மற்றும் கடும் பனிப்பொழிவு காரணமாக மீட்புப்பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாகவும்,
டிரோன் உறுதி செய்த இடத்தை நோக்கி மீட்புக்குழு விரைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதே போல், ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய ஈரான் அதிபரை கண்டுபிடிக்க, மேப்பிங் சேவைகளை வழங்கும் செயற்கைக்கோளை ஐரோப்பிய ஒன்றியம் செயல்படுத்தியுள்ளது.

நன்றி வீடியோ: @HassanSiddiqei